தனியார் பள்ளி பேருந்துகளில் நடத்தப்பட்ட ஆய்வு!! பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளியில் பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளிகள் பல இயங்கி வருகின்றது. இந்த பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் செல்ல பள்ளியின் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பள்ளி பேருந்துகளில் பராமரிப்புகள் சரியாக இருக்கின்றதா என வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பேருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரி, சரக போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையின்போது பள்ளி பேருந்துகளில் அரசு வகுத்துள்ள விதிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆகியவை மேற்கொள்ளப்படுகிறதா என்றும், அவசரகால வழி செயல்பாட்டில் உள்ளதா என்றும், மாணவ-மாணவிகள் பாடப்புத்தகங்களை வைக்கும் வசதி இருக்கின்றதா என்றும், வேக கட்டுப்பாட்டு கருவி இயக்கப்படுகிறதா என்றும், முதலுதவிப்பெட்டி சரியாக இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சுமார் 370 பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வில் தகுதி சான்றை சமர்ப்பிக்க படாத சிறுபழுதுகள் உள்ள பதினெட்டு பேருந்துகள் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் விபத்து இருந்தால் அதனை சமாளிக்க டிரைவர்களுக்கு தற்காப்பு நடவடிக்கை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை உள்ளிட்டவைகள் செயல் மூலமாக செய்து காண்பிக்கப்பட்டது. மீதம் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private school bus ride


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->