குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதமர் மோடி முன்னிலையில் திரௌபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தல் : பிரதமர் மோடி முன்னிலையில் திரௌபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்.!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 

இதில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24-ந் தேதி) நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Presidential Election Draupadi Murmu to file nomination tomorrow in presence of Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->