எதிர்க்கட்சி தலைவர் தான். அதுக்காக இப்படியா.? - பிரேமலதா காட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்று நிரூபிப்பதற்காக அனைத்தையும் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறாரா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் பல விஷயங்கள் குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக ரயில்வே தனியார் மயமாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

அதில், வேலைவாய்ப்புகளை, மக்களை பாதிக்காமல், உலக தரத்தில் ரயில்வே துறையை கொண்டுசெல்வதாக இருந்தால் தனியார்மயமாக்கலை வரவேற்கலாம் என்கிறார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு பற்றி பேசிய அவர், மாணவர்கள் நேர்மையான வழியில் தான் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம்; அதனால் படித்து முன்னேற வேண்டுமே தவிர, எந்த விதத்திலும் குறுக்கு வழியில் மட்டும் செல்லக்கூடாது என்றார்.

எந்த மொழியை படிக்க வேண்டும் என்று அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற அவர், எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காகவும், அதை  நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின் எனவும் கேள்வி எழுப்பினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijaykanth about stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->