2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர் மெகா பிளான்.! பீதியில் கூட்டணி கட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


நடைபெற இருக்கும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பில் பிரசாந்த் கிஷோரின் அமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதற்கு காரணமாக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் பொழுது மூன்றில் ஒரு பங்கு தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி கொடுக்கும்பட்சத்தில் அந்த கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால், அந்த தொகுதிகளிலும் திமுக தான் போட்டியிட வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், குற்றப்பின்னணி அதிகம் இல்லாதவர்கள் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும், மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை கட்டாயம் நியமிக்க வேண்டுமென்றும் பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ஐடியாக் காரணமாக காங்கிரஸ் உட்பட திமுகவின் கூட்டணி கட்சிகள் பல அதிர்ந்து உள்ளன. சமீபத்தில் திருமாவளவனின் திடீர் ஆவேசம் கூட இதனால் தான் என்று கூறப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பித்து வரும் தேர்தலில் களமிறங்க இருக்கும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டாம் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishore to stalin should go alone in 2021 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->