முக ஸ்டாலினின் தேர்தல் ஆலோசகரின் செல்போனும் ஹேக்.?! வெடிக்கும் 'பெகாசஸ்' விவகாரம்.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் தனியார் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக, அவரே தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. 

அந்த செய்தியில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் 'பெகாசஸ்' மூலம், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின்  செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

இதுகுறித்து பாஜக மற்றும் மத்திய அரசு தரப்பில், இது சர்வதேச சதி., யாருடைய செல்போனும் ஒட்டு கேட்படவில்லை என்று தெரிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து, ஆளுநரை மளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தனியார் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், “நான் எனது போனை 5 முறை மாற்றிவிட்டேன். ஆகினும் ஒரு பயன் இல்லை. 

கடந்த 2017 ஆண்டு முதல் தற்போதுவரை என் செல்போனை யாரோ ஒட்டுக்கேட்கிறார்கள் என சந்தேகம் இருந்து வருகிறது. ஆனால், என் செல்போனை ஹேக் செய்கிறார்கள் என்று என்னால் உணர முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishore say my phone also hack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->