திமுகவில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.? எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகன்.! கதிகலங்கும் கூட்டணி கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை திமுக பிரசாந்த் கிஷோர் டீமுடன் இணைந்து சந்திக்கவுள்ளது. பிரசாந்த் கிஷோர் 2021ஆம் ஆண்டு ஸ்டாலினை எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் என்ற திமுகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முடிவை திமுக தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய கட்சிகள் தவிர மற்ற கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென பிரசாந்த் கிஷோர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவுக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த முடிவை எதிர்ப்பதாகவும், ஸ்டாலினுக்கு இதுகுறித்து அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது .

சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதியில் கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் தொகுதிகளில் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி வாய்ப்பு குறைவு எனவும்  பிரசாந்த் கிஷோர் டீம் கூறியதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishor new idea in dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->