முன்னாள் குடியரசு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.!  - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த சூழலில் மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் மற்றும் டாக்டர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், இதனால் நான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pranab mukherjee corona positive confirmed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->