புதிய கட்சியை தோற்றுவிக்கும் பிரபல நடிகர்!! பரபரப்பு பேட்டி!!  - Seithipunal
Seithipunal


விரைவில் புதிய கட்சி துவங்குவேன் என பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். 

நடிகா் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாா். இருப்பினும் அந்த தொகுதியில் அவர் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தாா். 

இந்நிலையில், நேற்று இரவு நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் விரைவில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பெங்களூரு மாநகராட்சி தோ்தலில் பிரகாஷ் ராஜ்ஜின் புதிய கட்சி சாா்பாக வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். திறமையாக பணியாற்றி வெற்றிபெற்று நாங்கள் மக்கள் சேவை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prakashraj says about politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->