"சந்தேகபட்டது சரியா போச்சு" பூண்டி கலைவாணன் ஆவேசம்!! அதிமுகவின் சதி திட்டம் அம்பலம்?! - Seithipunal
Seithipunal


திருவாரூர் தேர்தல் வரும் ஜனவரி 28 ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக கஜா புயல் நிவாரப்பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அமமுக, திமுக மற்றும் நாதக தனது வேட்ப்பாளரை அறிவித்து இருந்தது. ஆனால், அதிமுக தனது வேட்பாளரை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது.

இதற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்பட்டது. ஆனால், அதிமுகவின் 'மாஸ்டர் பிளான் இது தான்!! தேர்தல் எப்படியும் ரத்து செய்யப்பட்டு விடும்' என அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து கூறிய நிலையில், தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், திமுக வேட்பாளர் திரு. பூண்டி கலைவாணன்," சந்தேகப்பட்டது உண்மையாகிவிட்டது. அதிமுகவின் தேர்தல் பயமே இதற்கு காரணம்' என அதிமுகவின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். 

மேலும், அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், " மத்திய அரசும், அதிமுக அரசும் சேர்ந்து சதி செய்துள்ளது. மக்களை ஏமாற்றி மீண்டும் மீண்டும் முட்டாளாக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன்றன" என்றும் கடுமையாக சாடியுள்ளார். 

இந்த தேர்தல் நிறுத்தத்திற்கு, தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசிக, கம்யூனிஸ்ட் போன்ற திமுகவின் தோழமை கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poondi kalaivanan blamed admk for stopping by election of thiruvarur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->