#Breaking || தமிழகம் வரும் தடுப்பூசிகள்.! சற்றுமுன் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும். 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் 50 வயதிற்கு மேலே உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு 5.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசிகள் அனைத்தும் புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pone corona vaccine in tn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->