37 எம்பிக்கள் சொத்தை விற்பனை செய்து ஸ்டாலின் அனைத்தையும் செய்வார்.! கலாய்த்து தள்ளிய மூத்த தலைவர்.!!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் பாரதிய ஜனதா கட்சியானது அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. தமிழகத்தை பொறுத்த வரையில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த சமயத்தில்.,. திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மக்களுக்கு நலப்பணி செய்யபடும் என்று ஸ்டாலின் அறிக்கைகளை விட்டிருந்தார். 

இந்த நிலையில்., திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது., 

தமிழகத்தில் விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்வி கடன்களை தள்ளுபடி செய்தே தீருவோம் என்று திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்திருந்தனர். இந்த சமயத்தில்., திமுக கூட்டணியை சேர்த்து மொத்தம் 37 எம்.பிக்கள் உள்ளனர். 

ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் படி ஆறு மாத காலத்திற்குள் 37 எம்.பிக்களின் சொத்தை விற்பனை செய்வது., மக்களுக்கான கடனை திரும்பி அடைத்துவிட வேண்டும்.  

தமிழகத்தை பொறுத்த வரையில் தற்போது உள்ள குடிநீர் பிரச்சனையை சரி செய்ய ஆலோசனை கூறாமல்., அதற்கான வழிமுறைகளை செய்யாமல் பிரச்சனையை பூதகரமாக்கி வருகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பங்கு உண்டு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

குடிநீர் பிரச்சனையை விரைவில் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து தீர்க்கும்., காவேரியில் உள்ள நீரை திறந்துவிட மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan says stalin 37 MP victory and sell property to re deposit peoples loan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->