ராஜ்ய சபா எம்பி பதவி குறித்து பொன்னார்.! அதிமுகவுக்கு நிம்மதி.. பாஜகவினருக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மூன்று மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. தமிழகத்தில் இருக்கும் எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவிலிருந்து 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த பதவியை பிடிக்க அதிமுக சார்பில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 

இதில் அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிமுக நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஏற்கனவே ஒப்பந்தத்தின்படி பாமகவிற்கு ஒரு எம்பி சீட் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள இடத்தை பிடிக்க தேமுதிகவும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் அதிமுகவிற்கு இந்த இரண்டு கட்சிகளுக்கும் எம்பி சீட்டு கொடுக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "பாஜக மாநிலங்களவை பதவியை பெற எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை. 

கூட்டணி என்பது திரைப்படம் போல அல்ல என்பதை கமல் விரைவில் புரிந்துகொள்வார். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்கட்சிகள் எங்களை தயார்படுத்தி வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan says about rajya saba mp seat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->