ரஜினி செய்த தவறால் திமுக ஆட்சியில் அமர்ந்தது.. ரஜினி எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்பது விருப்பம்..! முன்னாள் அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினி கட்சி தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் முதலமைச்சர் ஆக ஆசைப் படவில்லை எனவும், கட்சியை நிர்வகிக்க போவதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக வேறு ஒருவரை நியமிக்க போவதாகவும் கூறினார். 

மேலும் இளைஞர்களுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியவை, ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது. ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பது அனைவரும் விருப்பம். 1996 ரஜினிகாந்த் செய்ய செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan says about rajini party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->