ஒன்னே ஒன்னு., ப்ளீஸ் வாபஸ் வாங்கிடுங்க., சுயேச்சை வேட்பாளரிடம் கெஞ்சி கூத்தாடிய அரசியல்வாதிகள்.! - Seithipunal
Seithipunal


ஒண்ணே ஒன்னு., ப்ளீஸ் வாபஸ் வாங்கிடுங்க., சுயேச்சை வேட்பாளரிடம் கெஞ்சி கூத்தாடிய அரசியல்வாதிகள்.! 

போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஒரு சுயேச்சை வேட்பாளரை அரசியல் கட்சிகளும், தேர்தல் அதிகாரிகளும் அவரின் வேட்பு மனுவை வாபஸ் பெற கோரிக்கை வைத்து, அவரை வாபஸ் பெற வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதிகள் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 6 பேரின் வேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்று தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

நேற்று மூன்று பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்று அதன் மூலமாக, போளூர் சட்டமன்ற தொகுதியில் 16 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் மொத்தம் 16 பொத்தான்கள் மட்டுமே இருக்கும். 15 வேட்பாளர்களுக்கு பொத்தான்களும், நோட்டாவுக்கு ஒரு பொத்தானும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு வேட்பாளராக கூடுதலாக இருப்பதால், அவருக்காக ஒரு வாக்கு இயந்திரம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மேலதாங்கள் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்ற சுயேச்சை வேட்பாளர் இடம் அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தேர்தல் அதிகாரிகளும் பேசிப் பார்த்தனர்.

ஒருவழியாக சுயச்சை வேட்பாளர் ரங்கநாதன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் போளூர் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் போளூர் சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு வாக்கு இயந்திரம் மட்டும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

polur assembly candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->