வீடியோ வெளியிட்ட நக்கீரன் கோபால்.. சிக்கலில் சிக்கினார்.! சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை செய்படும் காட்சிகளை முதலில் இணையத்தில் வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி அவதூறு பரப்பியதாகவும், வீடியோ வெளியிட்டதாகவும் நக்கீரன் கோபால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

English Summary

POLLATCHI ISSUE NAKKEERAN GOPAL


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal