பொங்கலுக்கு பிறகு அரசியல் அதிர்ச்சி...! NDA-வில் புதிய கட்சிகள் இணையும்...! -நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


“ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற பார்வையை முன்னிறுத்தி, தமிழரும் காசி மக்களும் பகிர்ந்து கொள்ளும் பாரம்பரிய–ஆன்மீக இணைப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் 4.0 இன்று திருவிழாவாக தொடங்கியது.தென்காசி ‘தெற்கின் காசி’ என அழைக்கப்படும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து அகத்திய முனிவர் யாத்திரை வாகன பேரணி புறப்பட்டது.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் கொடி ஊதிவிட்டு பேரணியைத் தொடக்கிவைத்தார்.இந்த விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், Zoho நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரிதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, NDA கூட்டணியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி (குட்டியப்பா) எம்.எல்.ஏ, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன் ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர்கள் இணைந்து வாரணாசி நோக்கி புறப்பட்ட 15 வாகனங்களுக்கு கொடியசைத்து வழியனுப்பினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,"பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் மகத்துவத்தையும் கலாச்சாரத்தையும் உலக மேடையில் பெருமையுடன் பேசுகிறார்.

வாழும் பாண்டிய மன்னரைப் போல, காசியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தமிழ் சங்கம விழாவை நடத்தி வருவது அதற்குச் சான்று.SIR பணிகளில் எந்த குறையும் இல்லை. இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் வைத்திருக்கவே திமுக போராடுகிறது.50 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க. நல்லாட்சியை மறந்துவிட்டு, இப்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது.

அவர் மேலும் தெரிவித்ததாவது,“பொங்கலுக்குப் பிறகு NDA-வில் பல புதிய கட்சிகள் இணையும். செங்கோட்டையன் அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்கு சென்றிருப்பது புதிய தொடக்கம் மாதிரி தான்… ஆனால் அடுத்த திசை எது என்பதே கேள்வி.நாட்டின் அரசியலில் 100 நாட்களில் பல மாற்றங்கள் நிகழலாம். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சக்தி புயலாய் வீசும்… NDA கை ஓங்கி வெற்றி பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political shock after Pongal New parties join NDA Nainar Nagendran


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->