பாசியால் துடித்த குழந்தை., காவல்துறை செய்த செயலால் மனம் நெகிழ்ந்த பொதுமக்கள்!! - Seithipunal
Seithipunal


கோவை அரசு மருத்துவமனையில் அருகே உள்ள ஆவின் பூத்தின் எதிரே ஆண் ஒருவர் கைக் குழந்தையுடன் நீண்ட நேரமாக அங்கேயே  நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை நீண்டநேரமாக அழுது கொண்டிருந்தது. கூடவே இருந்த குழந்தையின் தாயாரும் அலட்சியமாக இருந்ததால், குழந்தை திருடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி சந்தேகமடைந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

பொது மக்களின் புகாரையடுத்து சம்பாவிடத்திற்கு வந்த போலீசார் கைக் குழந்தையுடன் இருந்த தம்பதிகளை தீவிர விசாரணை மேற்கொண்டபோது குழந்தையின் பெற்றோர் அவர்கள் தான் என உறுதியானது. மேலும் பெற்றோர்களிடம் பால் வாங்கி கொடுக்க கூட பணமில்லாமல் தான் அந்த குழந்தை பசி காரணமாக நீண்ட அழுதது தெரிவந்தது.   

இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ள வந்த தலைமை காவலர் சுந்தரி பசியால் அழுத குழந்தைக்கு , பால் வாங்கி கொடுத்தார். மேலும் பெற்றோர்களால் முறையாக பராமரிக்கப்படாத அந்த குழந்தையை காப்பகத்துக்கு எடுத்து செல்வதாக சமூகநலத்துறை அதிகாரிகள் போலீஸ்சாரிடம் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளின் முடிவிற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், குழந்தையை கவனமாக பார்த்து கொள்வதாக எழுத்து பூர்வமாக காவல் நிலையத்தில் உறுதி அளித்தனர் இதைதடுத்து குழந்தையை சமூகநலத்துறை அதிகாரிகள் பெற்றோரிடமே ஒப்படைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police help for hungry child baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->