அடுத்தடுத்து சிக்கும் திமுகவின் முக்கிய புள்ளிகள்.! அன்றே சொன்ன செந்தில் பாலாஜி.!  - Seithipunal
Seithipunal


அண்மையில் மணல் திருட்டில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், போலீசாரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை தற்காலிகமாக அக்கட்சியின் தலைமை நீக்கி இருந்த நிலையில், தற்போது திமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவன் மணல் கடத்தலில் ஈடுபட்டதற்காக, போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலின் போது, கரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்பாலாஜி, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாட்டுவண்டியில் இனி யார் வேண்டுமானாலும் மணல் அள்ளிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மேலும், "முதலமைச்சராக முக ஸ்டாலின் 11 மணிக்கு பதவி ஏற்றால் 11.10 க்கு நீங்கள் ஆற்றில் இறங்கி மணல் எடுத்துக்கொள்ளலாம். எந்த அதிகாரி உங்களை தடுத்தாலும் என்னிடம் சொல்லுங்கள், அவனை நான் மாற்றி விடுகிறேன்." என்றும் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்திருந்தார்.

இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி. சமூக வலைதளங்களில் திமுகவையும், செந்தில் பாலாஜியும் ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்று இரண்டு மாதங்களில் மணல் திருட்டு சம்மதத்தில் திமுக பெயர் அடிபட்டுள்ளது.

சம்பவம் 1: 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி என்பவர், திருட்டுத்தனமாக மணல் அள்ளியது மட்டுமல்லாமல், அதனை தட்டிக் கேட்க வந்த போலீசாரை மிரட்டிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது. நீக்கப்பட்ட ஆரோக்கியசாமி அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 2: 

இந்தநிலையில், அதே திருச்சி மாவட்டம், மணப்பாறை இடையப்பட்டியை சேர்ந்த திமுக கவுன்சிலர் கலைச்செல்வியின் கணவர் தர்மராஜ் மீது, மணல் கடத்திய வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, அவரின் ஓட்டுநர் பால்ராஜ் கைதான நிலையில், தற்போது திமுக கவுன்சிலரின் கணவர் தர்மராஜ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், "அன்று செந்தில் பாலாஜி கூறினார்., இன்று நடந்து கொண்டிருக்கிறது" என்ற விமர்சனம் செய்து வருகின்றனர். 

அதே சமயத்தில், மணல் கடத்தியவர்கள் தனது கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும், காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு தருவது பாராட்டுக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file dmk counselor husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->