டிஎஸ்பி-க்கே மிரட்டல்.! அராஜகத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ.!! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!!! #வீடியோ - Seithipunal
Seithipunal


திமுகவின் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,  எழிலரசன், போலீஸ் அதிகாரிகளை பார்த்து, ''போயா அங்கிட்டு.. என்னய்யா..? என்னய்யா..? உன்னால் என்ன செய்ய முடியும்.. உன்னால் என்ன செய்ய முடியும்..'' என்று தாக்குவது போல் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், இவர்கள் ஆட்சியில் இல்லாதபோதே போலீசுக்கு இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நேற்று, காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்யவும், அதன் அருகிலேயே காந்திரோடு தேரடி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் நடிகர் உதயநிதி பிரசாரம் செய்யவும் அனுமதி வாங்கி இருந்தனர்.

முதலில் வந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், பிரச்சாரத்தை முடித்துவிட்டு, ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முற்பட்டார். அப்போது அங்கு உதயநிதிக்காக காத்திருந்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ பரமசிவம் உள்ளிட்ட திமுகவினர் அவருக்கு வழி விட முடியாது என்று முரண்டு பிடித்தனர்.

முரண்டு பிடித்த திமுகவினரிடம், டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் ஆகியோர், ''உதயநிதி இன்னும் பிரசாரத்துக்கு வரவில்லை. அதனால் துணை முதல்வர் கோவிலுக்கு செல்ல வழி விடுங்கள்'' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், திமுக எம்எல்ஏ மற்றும் திமுக குண்டர்கள், ''யோவ்.. வழி விட முடியாது.. போய அங்கிட்டு.. என்னாய்யா.. என்ன.. உன்னால என்ன பண்ணமுடியும்'' என்று காவல்துறை உயர் அதிகாரியை தாக்கும் வகையிலும், மிரட்டல் விடுத்தும் பேசினார். 

இந்நிலையில், போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ. எழிலரசன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கூட்டாக சேர்ந்து மிரட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக குண்டர்கள் 50 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English Summary

POLICE CASE FILE AGAINST DMK MLA


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal