ஒரே நாளில் மூன்று தொகுதிகளில் அன்புமணி! வெளியான முழு விவரம்!  - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான  மருத்துவர் அன்புமணி, தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிக்கபட்டது முதலே அங்கேயே பிரச்சாரம் செய்து வந்த அன்புமணி இன்று பாமக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாமக தலைமை அறிவித்துள்ளது. 

அதன்படி, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிகளில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் (02.04.2019) செவ்வாய்க்கிழமை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை  மேற்கொள்ள உள்ளார். அவர் எங்கு எப்போது யாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முனைவர். சாம்பால், ஆதரித்து மாலை 4.00 மணி     சூளைமேடு நெடுஞ்சாலை, ஆயிரம் விளக்கு ச.ம. தொகுதி, மாலை 5.00 மணி அளவில் என்.எஸ்.கே நகர், அரும்பாக்கம், அண்ணா நகர் ச.ம. தொகுதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  

அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்  மருத்துவர். வைத்தியலிங்கம் ஆதரித்து மாலை 6.00 மணி  அளவில் போரூர் சந்திப்பு, மதுரவாயல் ச.ம. தொகுதி, இரவு 8.00 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலும், இரவு 9.00 மணி  கீழ்க்கட்டளை சந்திப்பு, பல்லாவரம் ச.ம. தொகுதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

இதற்கிடையே இரவு 7.00 மணி அளவில் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில்  திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பளார் மருத்துவர் வேணுகோபால், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் அதிமுகவின் க.வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK youthwing leader anbumani election campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->