நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானம்.! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்.! பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடக்கும் அனைத்து விதமான தேர்தல்களிலும் கருத்து கணிப்புகள் வெளிவருவது கடந்த இருபது வருடங்களாக வழக்கமாகி உள்ளது. இந்த தேர்தல் கணிப்புகள் பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில், அதாவது வெற்றி பெற இருந்தவர் தோல்வியடையவும், தோல்வி அடையப் போகும் அவரை வெற்றிபெற செய்யவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் பல செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் இந்த தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு, தேர்தலுக்கு முன்பே இவர் தான் வெற்றி பெறுவார் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, தோல்வி அடையப் போகும் கட்சிக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு மனநிலையை உருவாக்கும் ஒரு முயற்சியில்தான் இந்த தேர்தல் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்துபவர்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் நிதி அளிக்கப்படுவதாகவும், சில அரசியல் கட்சிகள் இந்த கருத்துக்கணிப்புக்கு என்றே பல அமைப்புகளை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.

இதில், தமிழகத்தை பொறுத்தவரை, நடைபெற்ற அனைத்து சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும் வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பொய்யாகத்தான் இருந்துள்ளது. இதுக்கு முக்கிய காரணம், நடுநிலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் செயல்படும் ஒரு செய்தி ஊடகம் வெளியிடும் கருத்து கணிப்பு எப்படி இருக்கும். அப்படி தான் கருத்து கணிப்பும் இருக்கும்.

இந்த செய்தி ஊடகங்களின் கருத்து கணிப்பு பற்றியும், இந்த செய்தி ஊடகங்கள் யார், யாருக்கு இயங்குகிறார்கள் என்று தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன?. இதில் ஒரு நகைப்பு என்ன என்றால் அந்த செய்தி ஊடகங்கள் தங்களை இன்றுவரை ஒரு நடுநிலை ஊடகம் என்று கருதி கொடுக்கும் பில்டப்புகள் தான் என்கின்றனர் அரசியல் புரிந்த சமூகவலைத்தள வாசிகள். 

இதனைக் கருத்தில் கொண்டே சமீப காலத்தில் நடந்த தேர்தல்களில் கருத்துக்கணிப்புகளை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வெளியிடக்கூடாது என்ற தடைகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், இந்த தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கவும் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வரும் நிலையில், வரும் மே மாதம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாநில அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒரு சிறப்பு தீர்மானமும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸால் கொண்டுவரப்பட்டது.

இதில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது. 

பாமக நிறைவேற்றிய அந்த தீர்மானத்தில், 

தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்!

இந்தியாவில் நடத்தப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை எதிரொலிப்பதற்கு மாற்றாக, ஒரு சார்பினருக்கு ஆதரவாக கருத்தை திணிக்கும் வகையில் தான் நடத்தப்படுகின்றன. இதனால், தேர்தல் களத்தில் சமநிலை தன்மை பாதிக்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஆகும். வசதிபடைத்த கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்ய கோடிக்கணக்கில் செலவிடுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.


 
தேர்தல் கணிப்புகள் துல்லியமான மதிப்பீட்டை தருவதில்லை; அதனால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் ஐயத்திற்கு இடமின்றி நடத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக தேர்தல் கணிப்புகளை தடை செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை அவற்றின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கருத்து கணிப்புகளை வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கும், அந்த ஊடகங்களுக்கு படியளக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த தீர்மானம் பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.

(இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களின் மனநிலையை, வெறும் 20 லட்சம் பேர் சொன்னதை வைத்து அடுத்த ஆட்சி இவர் தான் என்று மக்கள் மனதில் பதிய வைப்பதுக்கு பேர் தான் உண்மையான ஜனநாயக படுகொலை. இது இந்தியாவில் மட்டும் அல்ல ஜனநாயம் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்குமொரு வழக்கமான படுகொலை  தான் என்பது குறிப்பிடத்தக்கது.)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk resolution for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->