அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி.. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி.!! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர்‌ ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ தனித்துப்‌ போட்டி: நாளை (இன்று) விருப்ப மனு!

தமிழ்நாட்டில்‌ இதுவரை உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ அக்டோபர்‌ 6, 9 ஆகிய தேதிகளில்‌ இரு கட்டங்களாக நடைபெறும்‌ என்று மாநிலத்‌ தேர்தல்‌ ஆணையம்‌ அறிவித்துள்ளது. 

இத்தேர்தலில்‌ பாட்டாளி மக்கள்‌ கட்சியின்‌ நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின்‌ தலைமை நிலைய நிர்வாகிகள்‌, 9 மாவட்டங்களின்‌ துணைப்‌ பொதுச்‌ செயலாளர்கள்‌ உள்ளிட்ட நிர்வாகிகள்‌ பங்கேற்ற ஆலோசனைக்‌ கூட்டம்‌ கட்சியின்‌ நிறுவனர்‌ மருத்துவர்‌ அய்யா, பா.ம.க. இளைஞரணித்‌ தலைவர்‌ மருத்துவர்‌ அன்புமணி இராமதாஸ்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌, எனது தலைமையில்‌, இணைய வழியில்‌ இன்று (நேற்று) மாலை நடைபெற்றது.

அக்கூட்டத்தில்‌, கட்சியின்‌ வளர்ச்சி கருதி இந்தத்‌ தேர்தலில்‌ தனித்து போட்டியிடலாம்‌ என்று நிர்வாகிகள்‌ தெரிவித்தனர்‌. அதனடிப்படையில்‌ 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ பாட்டாளி மக்கள்‌ கட்சி தனித்துப்‌ போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர்‌ அய்யா, மருத்துவர்‌ அன்புமணி இராமதாஸ்‌ ஆகியோரின்‌ ஒப்புதலுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர்‌ 15 மற்றும்‌ 16-ஆம்‌ நாட்களில் விருப்ப மனுக்கள்‌ பெறப்படும்‌. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மாநில துணைப்‌ பொதுச்செயலாளர்கள்‌ விருப்ப மனுக்களை பெற்றுக்‌ கொள்வார்கள்‌. விண்ணப்பித்தவர்களிடம்‌ உயர்நிலைக்‌ குழு மூலம்‌ நேர்காணல்‌ நடத்தி வேட்பாளர்கள்‌ அறிவிக்கப்படுவர்‌ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk no alliance for local body election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->