நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. பாமக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. 

இந்நிலையில், பாமக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோரிடம் வரும் 29 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் வரும் 29-ஆம் தேதி  திங்கள் கிழமை முதல் திசம்பர் 3 -ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரை மொத்தம் 5 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியான மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வர். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk new announcement for urban local election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->