பாமக எம்எல்ஏ அருளின் செயல்பாடுகள்.. திக்குமுக்காடும் ஆளுங்கட்சி.! பாராட்டித் தள்ளும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் சேலம் தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அருள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார்.

இதையடுத்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நடமாடும் வாகனம் மூலம் வீதிவீதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினை கேட்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகிறார். எம்எல்ஏ அருளின் இந்த அதிரடி நடவடிக்கை ஆளுங்கட்சியை அதிரவைத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு, அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனிடையே அரசு சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நல திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு அவ்வபோது விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த அதிரடி நடவடிக்கையால் ஆளுங்கட்சியினர் திக்குமுக்காடி உள்ளனர். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. குறிப்பாக சேலம் மாநகராட்சியை கைப்பற்ற திமுக திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பா ம க சட்ட மன்ற உறுப்பினர் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டு பல தரப்பினர் திக்குமுக்காடி உள்ளனர்.  எம்எல்ஏ அருள் மக்களோடு மக்களாக நிற்கும் மக்கள் எம்எல்ஏ என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk mla arul started mobile van


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->