ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?.. ஒண்ணுமே தெரியாம முதல்வராக நோக்கம் - மரு. அன்புமணி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " எனது நோக்கம் என்னைப்போல நீங்களும் முன்னேற வேண்டும். மு.க ஸ்டாலின் அப்படி கிடையாது. கலைஞரின் மகன் என்ற அடிப்படையில் மு.க ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறார். 

தமிழக முதல்வராக வேண்டும் என்றால் முதலில் நிர்வாகம் தெரிய வேண்டும். மாவட்டம் தெரிய வேண்டும், தமிழகத்தின் வரலாறு, சரித்திரம் போன்றவை தெரியும். மு.க ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது. மு.க ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்ன என்று தெரியுமா?. மருத்துவர் இராமதாஸில் இருந்து நான், நமது கட்சி நிர்வாகிகள், நமது கூட்டணிக்கட்சியினர் என அனைவருமே அடிப்படையில் விவசாயிகள். இன்றும் விவசாயம் செய்து வருகிறோம். 

நமது முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் என்ன என்று தெரியும். மு.க ஸ்டாலின் ஷூ போட்டுகொண்டு விவசாய நிலத்தில் நடந்து செல்கிறார். திமுகவினர் எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று கேட்பார்கள். கேட்டால் 10 வருடம் ஆட்சிக்கு நாங்கள் வரவில்லை, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுவார்கள். 

எங்களுக்கு இன்னும் 5 ஆண்டுகள் வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். காவேரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியை உறுதி செய்யும் வகையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளார் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Kanchipuram Dr Anbumani Ramadoss TN Election Campaign about MK Stalin fake 3 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->