11 மது ஆலைகளில் 7 ஆலைகள் திமுகவுக்கு சொந்தம்.. மருத்துவர் இராமதாஸ் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், "  காஞ்சிபுரம் தொகுதி வாழ் மக்களே, அருகாமையில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மக்களே, பாட்டாளிகளே, உழைப்பாளிகளே அனைவருக்கும் வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள மகேஷ்குமார் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய வேண்டும். உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் உங்களின் ஆதரவை தாருங்கள். 

இந்த கூட்டத்தினை தலைமையேற்று நடத்தும் அதிமுக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், த.மா.கா நிர்வாகிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பிற கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஆகியோருக்கும், வாக்காள பெருமக்களுக்கும் அன்பு வணக்கம். 

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாம் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் உயிரே எங்களுக்கு முக்கியம். மாம்பழ சின்னத்தில் வாக்களித்து மகேஷுக்கு வாய்ப்பை தாருங்கள். சிறந்த இளைஞர் அவர். தமிழகத்தை ஆட்சி செய்யும் விவசாயி, மீண்டும் விவசாயியாக வர வேண்டும். காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். 

நமது தாய்மார்கள் மது என்ற அரக்கனால் பாதிக்கப்பட்டுள்ளேர்கள். கடந்த 40 வருடமாக மதுவை ஒழிக்க போராடி வருகிறேன். ஒரு சொட்டு சாராயம் இல்லாத தமிழகத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை, இலட்சியம். எனக்கு தெரிந்த பெண் ஒருவரின் கணவர் குடிகாரர். அவரது இரண்டு மகள்களையும் எப்படியோ பாடுபட்டு கட்டிக்கொடுத்துவிட்டார். இறுதியில், மனைவி மதுகுடிக்க பணம் கொடுக்கவில்லை என்று தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தமிழகத்தில் உள்ள 11 மது ஆலைகளில் 7 ஆலைகள் திமுக காரர்கள் வைத்து நடத்தி வருகிறார்கள். ஒருமணிநேரம் கலைஞரிடம் மதுவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசினேன். டாக்டர் சொல்வதெல்லாம் சரிதான், படிப்படியாக குறைக்கிறேன் என்று முதல் நாள் என்னிடம் கூறிவிட்டு, மறுநாள் ஒருமணிநேரம் மது விற்பனை நேரத்தை குறைத்தார். திமுகவின் மக்களுக்கான பணி அவ்வுளவே. அவர்களுக்கு வருமானம் தான் முக்கியம். மது அரக்கனை முழுவதுமாக ஒழிக்க பாமக வேட்பாளர் மகேஷ்க்கு ஆதரவு தாருங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Election Campaign at Kanchipuram TN Election 2021 27 March 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->