திமுகவுக்கு நீங்கள் போடும் ஒட்டு, பத்மாசுரன் கதை போலத்தான் - மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


திமுகவிற்கு மக்கள் வாக்களித்தால், வாக்களித்த மக்கள் தலையிலேயே கைவைப்பார்கள். அது சிவனுக்கு வரம் கொடுத்த பத்மாசுரன் கதையை போலத்தான் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வந்தவாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வந்தவாசி தொகுதியில் உள்ள தெள்ளாரில் பேசிய மருத்துவர் இராமதாஸ், " திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது எல்லாம் அதிமுக செய்தது தான். பாமகவின் தேர்தல் அறிக்கையை தான் திமுக நகலெடுத்து விநியோகம் செய்து வருகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் பாமகவின் தேர்தல் அறிக்கையை 40 விழுக்காடு நகலெடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 

திமுக ஆட்சிக்கு வருவதை எண்ணி பொதுமக்களும், வணிகர்களும் பயம் கொள்கிறார்கள். நமக்கு சொந்தமான நிலம் இருக்குமா? கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்று மக்கள் பயம் கொள்கிறார்கள். எந்த கடைகளுக்கு சென்றாலும் அங்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் அராஜகம் செய்து அட்டூழியம் செய்கிறார்கள் திமுகவினர். பெண்களை தாக்குகிறார்கள்.

திமுகவின் பூர்வீகத்தை கூறினால் மக்கள் திமுகவினரை ஓடவிட்டுவிடுவார்கள். திமுகவினரின் அராஜகம் மக்களுக்கு நன்கு தெரிகிறது. மக்களிடம் திமுகவின் அட்டூழியங்களை எடுத்துரையுங்கள். நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு தேவையானதை செய்துவிட்டார், இன்னும் செய்துகொண்டு இருக்கிறார். 

அதிமுக குறித்தும் அதிமுக அரசு குறித்தும் எந்த விதமான எதிர்மறை கருத்துக்கள் எதுவும் இல்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். வரன் கொடுத்தவன் தலையில் கைவைத்து போல உள்ள புராண கதைப்படி, சிவனை அழிக்க நினைத்த பத்மாசுரன் இறுதியில் அழிந்தேபோனான். 

திமுகவிற்கு மக்கள் வாக்களித்தால், வாக்களித்த மக்கள் தலையிலேயே கைவைப்பார்கள். நல்ல கட்சி, நல்ல கூட்டணி, நல்ல வேட்பாளர், நல்ல திட்டங்களை தவிர மக்களுக்கு வேறென்ன வேண்டும். நமது நல்ல கூட்டணி தான் மக்களுக்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்தும் கூட்டணி. 

திமுகவில் ஒன்றும் இல்லாததால் பிரசாந்த் கிஷோர் என்ற நபரை பிடித்து, எங்களிடம் யோசனை இல்லை, யோசனை சொல்லுங்கள் என்று ரூ.380 கோடி கொடுத்து அழைத்து வந்துள்ளார்கள். பாமக பயிலரங்கத்தில் இலவசமாக பயிற்சி கொடுத்துள்ளோம். பணத்தை மக்களுக்கு கூட கொடுக்க மனமில்லாத திமுக பிரசாந்த் கிஷோரை பீகாரில் இருந்து அழைத்து வந்துள்ளது. 

கிராமங்களில் கூறுவதை போல சொல்புத்தி இருக்க வேண்டும், இல்லையென்றால் சுயபுத்தி இருக்க வேண்டும். திமுகவிடம் எதுவுமே இல்லை. முரளி சங்கர் அருமையான இளைஞர். அவரின் பேச்சுக்களை கேட்டால் திமுகவினரே நமக்கு வாக்களித்துவிடுவார்கள் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Eleciton Campaign About DMK Rowdiyisim TN Election 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->