பாமகவை கடந்து செல்வதால், சிக்கலில் சிக்கி தவிக்கும் தமிழகம்! ஆதாரபூர்வமாக வெளியான தகவல்!  - Seithipunal
Seithipunal


அண்மைக் காலமாக தமிழக அரசியலில் மிக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு விஷயங்கள் ஒன்று மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இன்னொன்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை, இந்த இரண்டு விவகாரம் தற்போது தமிழகத்தில் உள்ள அனைவராலும் பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. 

ஆனால் இந்த விவகாரத்தை ஆரம்ப கட்டத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளியுலகில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனை ஊடகங்களும் அல்லது நாட்டின் எதிர்கால நம்பிக்கைகள் என நம்பப்படும் இளைஞர்களும் அதிகம் கண்டுகொள்ளாத நிலையில், இறுதிக்கட்டத்தில் தமிழகம் போராட வேண்டிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. 

இட ஒதுக்கீடு விவகாரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் பாமக போராட்டம் நடத்தியதோடு இல்லாமல் 2019ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.  அதே அன்புமணி ராமதாஸ் தான் 2020-ம் ஆண்டு நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளார். அவருக்கு பின்னால் அனைத்து கட்சிகளும் அணிவகுத்து சென்றன. 

ஆனால் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த பிரச்சனையினை, 2018 ஆம் ஆண்டு பாமக நடத்திய போராட்டத்தினை கண்டு கொண்டிருந்தால், கடந்த இரண்டு வருடங்களாக ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்கபெற்ற அநீதியானது களையபட்டிருக்கலாம். 

அதே போல தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் மற்றொரு பிரச்சனை ஆன சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையானது மார்ச் மாதம் வெளியிடப்பட்ட உடனேயே, மே மாதம் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கையும் வெளியிட்டு, பின்னர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். 

இந்த விவகாரத்தினை அதிகம் பேச வைக்க வேண்டிய ஊடகங்களும், சமூக ஊடகங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மௌனமாக சென்றதன் விளைவே இன்று நடிகர்கள் மௌனம் களைய வேண்டும் என்று சொன்ன பிறகு பேசுபொருளாக்குகிறார்கள். 

ஒரு அரசியல் கட்சியின் அறிக்கையை, போராட்டத்தினை, அக்கட்சியின் செயல்பாடாக மட்டும் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வுகள் உணர்த்துகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே எதிர்பார்ப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கையை தான். ஏனெனில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை முழுவதுமாக ஆராய்ந்து, உறுதிப்படுத்திய பின்னரே அறிக்கை விடுவதில் பாமகவினர் வல்லவர்கள் என்பது அனைத்து கட்சிகளுமே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். 

இந்த விவகாரங்கள் குறித்து பாமகவினர் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மருத்துவ கல்வி OBC இடஒதுக்கீடு: 

OBC இடஒதுக்கீட்டிற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. ஆனால்,  வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான செய்திகளில், ஊடகங்கள் பாமகவின் பெயரை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. ஊடகங்களின் கண்ணை மறைப்பது எது? 

"மருத்துவ கல்வியில் OBC இடஒதுக்கீட்டுக்காக அதிகம் பாடுபட்ட கட்சி பாமக"

"2018" மருத்துவ கல்வியில் OBC இடஒதுக்கீடு தேவை என 4.3.2018-ல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். 10.3.2018-ல் இதற்காக சென்னையில் போராட்டம் நடத்தியது பாமக.

"2019" இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். இதற்காக 1.11.2019-ல் மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

"2020"  2020 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்துவதில் முன்னணியில் இருப்பதும் பாமக தான்.

இந்த சூழலில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், இதர கட்சிகளும் தொடுத்த வழக்கில் "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்" என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்த செய்தியை வெளியிடும் ஊடகங்கள், தொடர்ச்சியாக போராடிவரும் பாமகவின் பெயரை மட்டும் திட்டமிட்டு மறைப்பது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளனர். 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 : 

March 23, 2020 "Draft EIA Notification 2020: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை வெளியானது”

May 3, 2020 இந்த  EIA வரைவு அறிவிக்கைக்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் "பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது" என 2020 மே மாதம் 3 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார்கள். (முழு அறிக்கை :- https://bit.ly/3gatd7n ) (அதாவது சுமார் 2 மாதங்களுக்கு முன்பே).

June 29, 2020

பின்னர், EIA வரைவு அறிவிக்கையை கிடப்பில் போட வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஜூன் 29 ஆம் நாள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதினார்கள். (கடித இணைப்பு :- https://bit.ly/30YgPkw)

June 30, 2020

#PMKcallsWithdrawEIA2020 #WithdrawEIA2020 #NoEIADilution #SaveEIA என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி, இந்த EIA வரைவு அறிக்கைக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பாட்டாளி சமூக ஊடக பேரவையின் மூலமாக மேலுள்ள hashtags களை பயன்படுத்தி டிவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகத்தில் டிரென்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

June 30 முதல் இன்று வரை

இந்த EIA வரைவு அறிக்கைக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் - மின்னஞ்சல் அனுப்பும் பிரச்சாரம் ஜூலை மாத தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டு, இதுவரை சுமார் 10,000 மின்னஞ்சல் கடிதங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
(அந்த இணைப்பு:- http://bit.ly/EIAletterPT)

இப்படியாக பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளும் மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமையில் இந்த மக்கள் விரோத, சுற்றுப்புற சூழல் நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட EIA வரைவு அறிக்கைக்கு எதிராக பல விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது." 

இந்த இரண்டு விவகாரங்களிலும் தமிழகத்தில் முதன்முதலில் பேசிய கட்சி பாமக தான் என்பது தெளிவாகிறது.  ஆனால் அதனை கவனிக்க தான் ஊடகங்களும், இளைஞர்களும் தவறிவிடுகின்றனர். கவனிக்க தவறியதால் ஏற்பட்ட கால இடைவெளி எவ்வளவு என்பதையும் பாருங்கள்" என ஆதங்கப்படுகின்றனர் பாமகவினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK activity in OBC Reservation and EIA2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->