அதிர்ச்சி தோல்வி., இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பாராட்டு மழை.! குடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

மேலும், இன்று குத்துச்சண்டை வெல்ட்டர் வெயிட் (69 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன் அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில், நம் வீராங்கனை போராடி தோற்றார்.

இந்த தோல்வியின் மூலம் அவருக்கு தங்கம், வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோகியது. இருப்பினும் அவர் வெண்கல பதக்கம் வென்று உள்ளார். இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை லவ்லீனாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உங்கள் கடின உழைப்பு மற்றும் உறுதியான நம்பிக்கையால் நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்.  உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இளைஞர்களையும், இளம் பெண்களையும் கனவுகளை நிஜமாக்கும் உங்களின் வெற்றி ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது" என்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சிறப்பான ஒரு சண்டையை வெளிப்படுத்தினார். நமது வீராங்கனை குத்துச்சண்டையில் அவரின் வெற்றி பல இந்தியர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவருடைய திறமையும், உறுதியான மனநிலையும் போற்றத்தக்கது. நம் தேசத்தின் வீராங்கனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அசாம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, அனைத்து விதமான முரண்பாடுகளுக்கும் எதிராக போராடி, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தை வென்று தந்துள்ளார். தன் தாயிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறார். இந்த வெண்கல பதக்கத்தை விட அவரது வாழ்க்கை அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகத்தை கொடுக்கும் விதமாக இருக்கிறது" என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish to Olympic medalist lovlina


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->