அடுத்த ஆட்டம் இருக்கு, பாத்துக்கலாம்.! உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம்.! இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு.! - Seithipunal
Seithipunal


மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 5 -2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி உடனடியாக இந்திய அணிக்கு உற்சாகத்தை மூட்டியுள்ளார்.

ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஹாக்கி அணி, இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ம் ஆண்டு தங்கப்பதக்கம் பெற்றது. 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி அரை இறுதி போட்டியில் இந்திய அணி ஆடியுள்ளது. 

இன்று நடந்த அரை இறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 3-ம் நிலையில் உள்ள இந்திய அணி, இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை இன்று எதிர்கொண்டது. இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், மந்தீப் சிங் ஆகியோர் ஆட்டத்தின் முதல் 8 நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். அதன் பின்னர் இந்திய வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்து ஆடிய பெல்ஜியம் அணி இறுதியில், 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அதேசமயத்தில், இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அடுத்து நடக்க உள்ள வெண்கல பதக்கத்துக்கான (மூன்றாவது இடத்துக்கான) ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "வெற்றி தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஒலிம்பிக் 2020 போட்டியில் நம்முடைய ஆண்கள் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

களத்தில் அதுதான் முக்கியம். அடுத்து நடக்க உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துக்கள். எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் (இந்திய நாட்டு மக்கள்) பெருமை கொள்கிறோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்தியில், "வீரர்களே., 
நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். 
நீங்கள் உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்துளீர்கள்,
நாங்கள் (இந்திய மக்கள்) உங்களுடன் இருக்கிறோம்.
நமக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கிறது.

நாங்கள் தான் இந்தியா.,
ஒருபோதும் எங்கள் நம்பிக்கையை விட்டு கொடுக்க மாட்டோம்" என்று அடுத்த போட்டுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish to india male hocky team now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->