பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.! - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறும் தலைமை செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அமைந்துள்ள பிசிஏ மைதானத்தில் தலைமை செயலாளர்கள் மூன்று நாட்கள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 

வரும் 2042 ஆம் ஆண்டில் நாட்டின் 100 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தொலைநோக்கு திட்டங்கள் மாநாட்டில் வரையறுக்கப்பட உள்ளன. மேலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவது ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சல பிரதேச பயணத்தை நிறைவு செய்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அந்த மாநிலத்தில் ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ. 16 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi vist gujarat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->