இன்று அதிகாலை அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம்.! பெரும் மன உளைச்சலில் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக அதற்கான சான்றிதழ் வழங்கும் நடைமுறை இன்று வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றுவருகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை நடந்தது. அப்போது திடீரென பாராளுமன்றத்துக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாராளுமன்றத்தை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது. வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI talk about us parliament issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->