இன்று 3 கோடி பேருக்கு., 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கு., பிரதமர் மோடி சற்றுமுன் ஆற்றிய உரை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய -மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடும் ஒத்திகை இரண்டு கட்டமாக நாடு முழுவதும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

இந்த நிலக்கட்சியில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். பிரதமரின் உரையில், "இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை.

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த மக்கள் தொகையே 30 கோடிதான். முதல் தடுப்பூசிக்கு பின் அடுத்த தடுப்பூசி எப்போது என்பது குறித்து தொலைபேசிக்கு தகவல் வரும்." என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI Speech corona vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->