திமுகவின் சித்தரிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


மதுரைக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்று நினைத்த அரசு பாஜக தான். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களை தமிழகத்தின் பாதுகாவலர் போல சித்தரித்து வருகிறார்கள். அது உண்மை கிடையாது என என பிரதமர் மோடி பேசினார்.

மதுரையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக, அதிமுக, பாமக மற்றும் பிற கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், " உலகின் தொன்மையான மொழி தமிழ். இந்த தமிழை சங்கம் வைத்து வளர்ததது மதுரை மாநகரம். மறைந்த தென்மாவட்ட தலைவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். 

எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியாகிய மதுரை வீரன் படத்தினை யாராலும் மறக்க இயலாது. தமிழக மக்களின் நலனிற்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. 

சாலை, இரயில்வே போக்குவரத்து மற்றும் கட்டுமானம் தொடர்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராம அளவிலும் இணையதள சேவைகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 3 வருடத்தில் தமிழகத்திற்கு 7 ஜவுளி பூங்காக்கள் வர இருக்கிறது. 

மதுரை மாநகரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். மதுரைக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்று நினைத்த அரசு பாஜக தான். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களை தமிழகத்தின் பாதுகாவலர் போல சித்தரித்து வருகிறார்கள். அது உண்மை கிடையாது. அதனை மக்கள் நம்ப வேண்டாம் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Speech about DMK Fake Politics TN ELection Campaign Madurai 2 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->