தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 219 பேர் இந்தியர்கள் மற்றும் 39 பேர் வெளிநாட்டவர்கள் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து கேரளா மாநிலத்தில் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi praises tn cm palanisami


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->