பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பசும்பொன் பெருமகனார், முத்துராமலிங்க தேவரின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கி, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்ற முத்துராமலிங்க தேவர் படைத்த சாதனைகளை, இன்று நினைவுகூர்ந்து அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!

"தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேசியமும் தெய்வீகமும் வளர்த்து,தமிழர்களை திரட்டி நேதாஜியின் இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்த்து,சாதிய பாகுபாட்டை எதிர்த்த திருமகனார்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் அவர் பெரும்புகழை போற்றி சென்னை- நந்தனத்தில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Devar Guru Pooja 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->