ஜி.கே. வாசனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி! ஜி.கே வாசனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! - Seithipunal
Seithipunal


சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு, இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்றது. அதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். அப்போது ஜி.கே.வாசனை சந்தித்த பிரதமர் மோடி, கடந்த முறை வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் வரவில்லை. இந்த முறை கட்டாயம் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கூறிய ஜி.கே.வாசன் கோவையில் கடந்த மக்களவை பிரச்சாரத்தின்போது மோடி என்னுடன் அன்பாக பேசியவர், கண்டிப்பாக வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் சில காரணங்களால் என்னால் போக முடியவில்லை. இத்தனை நாட்கள் கழித்தும் அதை மறக்காமல் ஏன் வரவில்லை என்று கேட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த முறை கண்டிப்பாக சென்று அவரை சந்திப்பேன். மேலும் அவர் ஒரு கூட்டணி கட்சியினர் என்ற முறையிலேயே மிகவும் சகஜமாக பேசினார் என்று கூறினார். ஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பது மற்ற கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi call gk vasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->