முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தற்போது பாகிஸ்தானிலுள்ள கா (புயா) என்னும் ஊரில் பிறந்தார்.

மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத்தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


 
2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் டாக்டர் மன்மோகன் சிங் இந்திய பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். பிறகு 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் டாக்டர் மன்மோகன் சிங் இந்திய பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுமுதல் 2014ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 

இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi birthday wishes manmohan singh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->