முதல்வர் இல்லம் முன்பு பரபரப்பு.. குவிக்கப்பட்ட போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் அண்மையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் போது சில சிறுவர்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ மாதங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, மத வெறுப்பை தூண்டும் விதமாக பேரணி நடத்தியதாக கூறி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் 25 பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா  அமைப்பு சார்ந்த நூற்றுக்கணக்கானோர் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தை நோக்கி நேற்று பேரணி சென்றனர். காவல்துறையினரின் தடுப்பையும் மீறி அவர்கள் சென்றனர். ஒரு கட்டத்தில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். 

இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முதல்வரின் இல்லத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI Protest for kerala cm home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->