ஸ்டாலினுக்கே போட்டி கொடுக்கும் பச்சமுத்து! அதிர்ந்து போனது திமுக! உறுதிமொழி பத்திரமே, உளரல் பத்திரமானதே! - Seithipunal
Seithipunal


விறு விறுப்பான தேர்தல் களம், வேட்பளார்கள் அறிமுகம், வேட்பளார்கள் வேட்புமனு தாக்கல் என தமிழகம் எங்கும் தேர்தல் திருவிழா தொடங்கி உள்ளது. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் தான் முக்கியமான நிகழ்வு நடந்தேறி உள்ளது.

திமுகவின் தலைமையில் கூட்டணி அமைத்து உள்ள முக்கிய கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் (எ) பச்சமுத்து இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் (தேர்தல் பிரிவு) சாந்தா அவர்களிடம் பெரம்பலூர் நாடளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை பெற்று கொண்ட பின்பு தேர்தல் விதிகளையும், உறுதி மொழிகளை வாய் மொழி உத்தரவு பத்திரத்தை வாசிக்க ஆட்சியர் சொல்ல, தமிழையே தடுமாறி தடுமாறி வாசித்து உள்ளார் பாரிவேந்தர். 

அவரின் தடுமாற்றத்தை கண்டு அவரோடு துணையாக வந்திருந்த வக்கீல் ஒருவர் வாசிக்க அதனை பாரிவேந்தர் டப்பிங் செய்வதை போல் குரல் கொடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். அருகில் நின்ற திமுக வேட்பாளரை பார்த்தால் அப்படி ஒரு மிரட்சி. நன்கு படித்தவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் என கல்வியில் பல புரட்சி செய்த பாரிவேந்தர் உறுதிமொழி பத்திரமே படிக்க  முடியவில்லையே, இவரை வைத்து எப்படி தொகுதியில் வாக்கு சேகரிப்பது என  கலங்கி போய் உள்ளனர் திமுகவினர். 

அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது, கூட்டணி போன இடத்தில் கூட்டணி கட்சி தலைவருக்கே போட்டியாக பாரிவேந்தர் உளறல்களில் வெற்றி பெற்று விட்டாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கல்வி தந்தைக்கே இந்த நிலையா ?? பாவம் பெரம்பலூர் தொகுதிமக்கள் எனவும் புலம்பி வருகின்றனர். வழக்கமாக துண்டு சீட்டை பார்த்து படிக்கும் ஸ்டாலின் பழமொழிகளை கூட மாற்றி படித்து தமிழ் உலகிற்கு பல புதுமொழிகளை வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peramabalur IJK dmk coalition candidates


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->