உருளைக்கிழங்கு பயிரிட்ட விவாசயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு.! அதிர்ச்சியில் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


ஏழைகளின் உணவு என கூறப்படும் உருளைக்கிழங்கு உண்மையில், ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை நொடிந்து போகச் செய்துள்ளது

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள்  லேஸ் சிப்சுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உருளைங்கிழங்கை பயிரிட்டுள்ளனர். இதற்கு பெப்சி நிறுவனம், தாங்கள் காப்புரிமை வைத்துள்ள லேஸ் உருளைக்கிழங்குகளை எப்படி அனுமதியின்றி விவசாயிகள் பயிரிட முடியும் என்று கூறி நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்துள்ளது . மேலும் அனுமதி இல்லாமல் உருளழகிழங்கு  பயிரிட்டு லாபம் ஈட்டியதற்காக, 9 விவசாயிகளும் தலா ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. மேலும், ஏற்கனவே, பயிரிட்ட உருளைக்கிழங்குகளை பெப்சி நிறுவனத்திடமே கொடுத்துவிட்டு, தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் அனுமதி பெற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் லேஸ் வகை உருளைக்கிழங்கைப் பயிரிடுவதால், 9 விவசாயிகளும், அவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லது வேறு வகை உருளைக் கிழங்கைப் பயிரிடுங்கள் என்று பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது

இந்தியாவில், தற்போது 35 வகையான உருளைக் கிழங்குகள் 30 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஏக்கருக்கு  இரண்டரை டன் மகசூலை விவசாயிகள் ஈட்டுகின்றனர்

தமிழகத்தில் கூட, நீலகிரி, பழனி போன்ற இடங்களில், பிரதான சாகுபடி பொருளாக உருளைக்கிழங்கு உள்ளது. உரவிலை உயர்வு, வங்கி கடன் போன்றவற்றால், நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள், பெப்சி நிறுவனத்தின் நடவடிக்கையால் தற்போது செய்வதறியாது உள்ளனர்.  இந்த விவகாரத்தில், தலையிட்டு பேச வேண்டிய குஜராத் மற்றும் மத்திய அரசுகளோ மௌனம் சாதிக்கின்றன. விவசாயிகளை மிரட்டும் பெப்சி நிறுவனத்தின் விவகாரத்தில் மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் தலையிடும் வரை, பெப்சி பொருட்களை புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய கிஷான் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pepsi company filed a case against to farmers for potato cultivation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->