மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டால் ஆர்எஸ்எஸ் இயக்கமே இருக்காது! - திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு லட்சம் பேருக்கு விலை இல்லா மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மக்களுக்கு மனுஸ்மிருதி பிரதிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் "மனுஸ்மிருதி என்பது ஹிந்துக்களின் வேத நூலாகவும் வழிபாட்டு நூலாகவும் இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்து சமூகம் இயங்கி வருகிறது. மனுஸ்மிருதி அடிப்படையில் குடும்ப நிகழ்வுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைபெறுகிறது.

ஆனால் மனுஸ்மிருதியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக பிரதிகளை மக்களுக்கு வழங்குகிறோம். டாக்டர் அம்பேத்கர் 1927 ஆம் ஆண்டு மனுஸ்மிருதியை எரித்தார். ஆர்எஸ்எஸ்-ன் கொள்கைதான் மனுஸ்மிருதி என்பதை விளக்கி நான் முன்னுரை எழுதியுள்ளேன். இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மக்களே தேடி வந்து வாங்கிச் செல்லும் நிலையில் இருக்கிறது.

ஆர்எஸ்எஸ் சட்டரீதியான வழிமுறை கையாள்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பாஜக என்ற அரசியல் கட்சி இருக்கும் பொழுது ஆர்எஸ்எஸ் ஏன் தனியாக பேரணி நடத்த வேண்டும் என்பது தான் எனது கேள்வி. பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்ப்பது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

மக்களிடையே விழிப்புணர்வு வந்துவிட்டால் இந்தியாவில் ஆர்எஸ்எஸுக்கு இடம் இருக்காது. ஆர்எஸ்எஸ்-ன் கோட்பாட்டின் அடிப்படையில் தான் பாஜக இயங்கி வருகிறது. ஆர்எஸ்எஸ் வெளிவேளையாகவே மதவெறி சாதிவெறி அரசியலை கட்டவிழ்த்து விடுகிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people awarded no RSS movement vck thiruma


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->