திமுக எம்.ஏல்.ஏ மீது பாய்ந்த  வன்கொடுமை தடுப்பு சட்டம்.! காவல்துறை அதிரடி.!  - Seithipunal
Seithipunal


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீதும், எம்.எல்.ஏ வை தாக்கியதாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் எனும் கிராமத்தில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன் தினம் அம்பலம் அருகே உள்ள கல்லத்தி கிராமத்தில் இரண்டு பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி அந்த பகுதி மக்களால் இரண்டு நபர்களும் விரட்டி அடிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமார் இருந்த வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து விரட்டிச்சென்ற இளைஞர்களுக்கு, திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமாருக்கும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதாக தெரிகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்ககளுக்கு கொடுக்கப்பட்ட  2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமார் இடம் இருந்து கைப்பற்றி பணத்தை தேர்தல்பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
 
இந்த சம்பவதில் எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 6 திமுகவினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும், திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமாரை  தாக்கியதாக அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தமிழன் ராஜா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.ஏல்.ஏ சரவணகுமார் மற்றும் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூலக்கரைப்பட்டிகாவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pcr case filed to dmk mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->