திமுககிட்டயா..? கொஞ்சம் யோசிக்கிறோம்.. 3 மாநில வெற்றியை தொடர்ந்து காலரை தூக்கி விடும் காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது தேர்தல் வெற்றி குறித்தும், கூட்டணி விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

அப்போது பேசிய அவர், தெலுங்கானா மாநிலம் உருவாக காரணம் காங்கிரஸ் தான். ஆனால் தன்னால் தான் அந்த மாநிலம் உருவானது என்ற எண்ணத்தை சந்திரசேகரராவ் மக்களிடம் பதிய வைத்து இருக்கிறார். மிகப்பெரிய பணபலத்தை பின்னணியாக கொண்டிருக்கும் அவர், தேர்தல் சமயத்தில் பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார். இதன் காரணமாக அவர் அங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கலாம்.

கூட்டணியை பொறுத்தவரையில் எத்தனை இடம், எந்தெந்த தொகுதிகள் என்பதை உரிய நேரத்தில் பேசுவோம். 5 மாநில தேர்தலில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கேட்குமா? என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க 16-ந்தேதி சென்னை வரும் சோனியாகாந்திக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மனிதசங்கிலி போன்று நின்றும் இசை, வாத்தியங்கள் முழங்கவும் மிகப்பிரமாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும் இல்லை, யார் வேண்டும் என்றாலும் ‘சீட்’ கேட்கலாம். முடிவு செய்வதற்கு கமிட்டி இருக்கிறது. ராகுல்காந்தி இருக்கிறார்' என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliamentary elections DMK In coalition Congress ask for more seats Thirunavukarar answer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->