மத்திய அமைச்சரை பேசவே விடாமல்., மொத்தமாக கிழித்து எறிந்த உறுப்பினர்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 200 பேரின் செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியது. 

அந்த செய்தியில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் 'பெகாசஸ்' மூலம், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

இதுகுறித்து பாஜக மற்றும் மத்திய அரசு தரப்பில், இது சர்வதேச சதி, யாருடைய செல்போனும் ஒட்டு கேட்படவில்லை என்று தெரிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து, இன்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கூடிய பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உளவு மென்பொருள் 'பெகாசஸ்' விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் உளவு மென்பொருள் 'பெகாசஸ்' குறித்து விளக்கம் அளிக்க எழுந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் அவரிடம் இருந்த கோப்புகளை பிடுங்கி கிழித்து எறிந்தார். 

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அவைக்காவலர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament stoped for Pegasus issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->