திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்,  இந்தியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் மதிமுகவிற்கு 1 மக்களைவை, 1 மாநிலங்களவை தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக போட்டிடப்போகும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியலை நேற்று மதியம் 1 மணிக்கு வெளியிட்டார். அந்த பட்டியல் பின்வருமாறு,

திமுக தொகுதிகள்:

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பொள்ளாட்சி, நீலகிரி, வேலூர், அரக்கோணம், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,  தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, கள்ளகுறிச்சி

மேலும், திமுக வேட்பாளர் பட்டியல் குறித்து உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

1) நீலகிரி - ஆ. ராசா 
2) பொள்ளாச்சியில் - பொங்கலூர் பழனிச்சாமி மருமகன் கோகுல் 
3) திண்டுக்கல் - வேலுச்சாமி 
4) கடலூரில் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் 
5) மயிலாடுதுறை - ராமலிங்கம் அல்லது ஜெகவீரபாண்டியன் 
6) தஞ்சாவூரில் - பழனிமாணிக்கம்
7) சேலத்தில் - மருத்துவர் பிரபு 
8) தூத்துக்குடி - கனிமொழி 
9) தென்காசி - தனுஷ்குமார் அல்லது பொன்ராஜ் 
10) திருநெல்வேலி - கிரஹாம்பெல் அல்லது ஆரோக்கிய ஞானவேல் 
11) வடசென்னை - ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி 
12) மத்திய சென்னை - தயாநிதி மாறன் 
13) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
14) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு
15) காஞ்சிபுரம் - அண்ணாதுரை அல்லது செல்வம் 
16) வேலூர் - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் 
17) அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன்
18) தருமபுரி - மணி அல்லது செந்தில் குமார்
19) திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை 
20) கள்ளக்குறிச்சி - பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி ஆகியோர் களம் காணுவார்கள் என திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament election dmk candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->