பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை - திமுக அமைச்சர் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal



மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லெட்சுமணன் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவரின் உடல் இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

விமான நிலையத்தில் வைத்தே லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பாஜகவினருக்கும், திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அமைச்சர் கார் மீது பெண் ஒருவர் காலணியை வீசினார். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே சமயம். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்யும் நாள் இது. 

கடந்த இரு நாட்களாக காத்திருக்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையில் பலமுறை தொடர்பு கொண்டு இன்று அவருக்கு மரியாதை செய்து வந்துள்ளோம். 

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை வைப்பதற்கு இது சரியான தருணம் இல்லை. நாளை பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palanivel thiyakarajan say about Madurai incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->