அடுத்தடுத்த அதிரடி... இரட்டை இலை மற்றும் வேட்பாளர் குறித்து பழனிச்சாமி தலைமையில் முக்கிய ஆலோசனை...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் நலம் மற்றும் கூட்டணி நலன் கருதி அதிமுகவின் விருப்பத்தை ஏற்று விட்டுக் கொடுப்பதாக கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து முக்கிய ஆலோசனையில் அதிமுக தரப்பு ஈடுபட்டு வருகிறது.

தற்பொழுது சேலத்தில் உள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனையில் ஈடுபட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சேலம் செல்கின்றனர். குறிப்பாக அதிமுக பொதுக்குழு வழக்கில் முழுமையாக ஈடுபட்டு வரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் சேலம் விரைந்துள்ளார்.

மேலும் ஈரோடு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palaniswami consulting about double leaf and candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->