நான்கு அமைச்சர்கள் நீக்கம்? மாஸ்டர் பிளான் போட்ட எடப்பாடி! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருந்து பாலகிருஷ்ணா ரெட்டி, மணிகண்டன் ஆகியோர் பதவி விலயதால் இரண்டு காலியிடங்கள் உள்ளது. இந்த இடங்களோடு தற்போது பதவியில் இருக்கும் நான்கு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லாததால் புதிய அமைச்சர்களை நியமிக்க முதலவர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.

புதிய அமைச்சர்களாக தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, சதன் பிரபாகர், சண்முகநாதன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் நீக்கப்படும் அமைச்சர்களில் பட்டியலில் ராஜலட்சுமி இடம்பெற்றார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் திடீரென நான்கு அமைச்சர்களை நீக்கும் முடிவை எடப்பாடி கைவிட்டார்.

அதற்கு காரணம், ஏற்கனவே அமைச்சர் பதிவிலிருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலை செய்து வருகிறார். மேலும் இந்த நான்கு அமைச்சர்களை நீக்கினால் மொத்தம் ஐந்து பேர் ஆகி அவர்கள் திமுகவை ஆதரிக்கக்கூடும், அதனால் ஆட்சிக் கவிழும் என்கிற எச்சரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத்துறையால் அளிக்கப்பட்டது. அதனால் நான்கு அமைச்சர்களை தற்காலிகமாக நீக்கும் முடிவை முதல்வர் தஹ்ரபோதைக்கு தள்ளி வைத்துள்ளார். ஆனால் புதிதாக இரண்டு அமைச்சரை தேர்வு செய்யும் ஆலோசனையில் தொடர்ந்து முதல்வர் ஈடுபட்டு வருகிறார். 
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palanisamy may be change four ministers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->