மாவட்டசெயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக  22 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது, இதில் தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது

இந்த நிலையில், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுகவின் அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்தும், விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

மேலும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி கையாள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சரும் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

English Summary

palanisamy discuss his district secretary


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal